Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்போதுதான் சைக்கிள் ஓட்டவே ஆரம்பித்துள்ளார் - விஜய்யை கடுமையாக விமர்சித்த நடிகை ஆர்த்தி

Advertiesment
Vijay
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழக அரசியல் களம் இப்போதே தயாராகி வரும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான விமர்சனங்களும் நாளுக்கு நாள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஆளும் திமுக மற்றும் புதிதாகக் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு தரப்புக்கும் இடையே நேரடி வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இந்த நிலையில், திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நடிகையும், பேச்சாளருமான ஆர்த்தி, தளபதி விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளது இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
 
திமுகவின் சாதனைகளை விளக்கி மேடைக்கு மேடை முழங்கி வரும் ஆர்த்தி, சமீபத்தில் நடந்த கூட்டத்தில் நடிகர் ஒருவரைப் பெயர் குறிப்பிடாமல் சரமாரியாகத் தாக்கிப் பேசினார். "நேற்று தான் ஒருத்தர் புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கிறார். ஆனால், நாளைக்கே தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்று பேராசைப்படுகிறார். அவர் திரையுலகில் ஒரு மிகச்சிறந்த நடிகர், அருமையாக டான்ஸ் ஆடுவார். ஒருவேளை, நமது சட்டசபையில் யாராவது டான்ஸ் ஆட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், தாராளமாக அவருக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுக்கலாம் என பேசினார்.
 
மேலும், அந்த நடிகரின் அரசியல் அனுபவத்தைக் கிண்டலடிக்கும் வகையில் பேசிய ஆர்த்தி, "அரசியல் என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அவர் இப்போதுதான் அரசியலில்  சைக்கிள்  ஓட்டவே ஆரம்பித்துள்ளார். இன்னும் அவர் கடக்க வேண்டிய தூரமும், கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் வித்தைகளும் நிறையவே இருக்கின்றன. அவருக்கு வந்திருப்பது வெறும் அரசியல் ஆசை மட்டுமே என்று  விமர்சித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தோனேசியாவில் சிக்கிய சீன உளவுக்கருவி: இந்திய பெருங்கடலில் பதற்றம்..!