விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 ஒரு மாதம் முடிந்துள்ள நிலையிலும் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. முக்கியமாக ஹவுஸ்மேட்ஸ் டாஸ்க் விளையாடுவதற்காக சண்டை போட்டுக் கொள்வதை விட சொந்த சண்டையே அதிகமாக இருக்கிறது.
விஜய் சேதுபதி இதை பற்றி ஓப்பனாக சொல்லி ஹவுஸ்மேட்ஸை எச்சரித்தும் அவர்கள் அடங்குவதாக தெரியவில்லை. இந்நிலையில்தான் நேற்று வைல்ட் கார்ட் எண்ட்ரியாக சாண்ட்ரா, ப்ரஜின், இந்து கணேஷ் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். போன முதல் நாளே ஹவுஸ்மேட்ஸை போட்டு வறுத்து எடுத்ததுடன், பாருவையும் அவரது சண்டை போடும் மனப்பான்மையையும் கடுமையாக விமர்சித்தார்கள். ப்ரஜின் பாருவின் பேப்பரை கிழித்து போட்டதெல்லாம் பாருவை இன்னும் எரிச்சலூட்டியது.
பாருவை வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் கிழித்தெடுத்தது ஆடியன்ஸுக்கு சுவாரஸ்யமாய் அமைந்தாலும், வரும் வாரங்களில் இவர்கள் பாருவால் ட்ரிகர் ஆகாமல் இருப்பார்களா என்ற கேள்வியும் இருந்து வந்தது. அதற்கேற்றார்போல முதல் நாளே வரித்துக் கட்டிக் கொண்டு இறங்கிய பாரு, வைல்ட் கார்ட் போட்டியாளர்களுடன் சண்டையில் இறங்கியுள்ளார். என் கேமை விமர்சிக்க நீங்கள் யார் என பாரு சண்டையில் இறங்கிய நிலையில் இதற்கு ட்ரிகர் ஆகாமல் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் தாக்கு பிடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Edit by Prasanth.K
#Day29 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 3, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/ARsJXXisZc