"முதலமைச்சராக்கிய சசிகலாவிற்கே துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, ஒருவேளை அதிமுக - த.வெ.க கூட்டணி வெற்றி பெற்றால், விஜய்யையும் ஓரங்கட்டி விடுவார்," என்றும், விஜய்யை காலி செய்து விடுவார் எடப்பாடி பழனிசாமி என்றும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
தாம், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்தால் இபிஎஸ்-இன் பதவிக்கு ஆபத்து என்பதால் தான் நீக்கப்பட்டதாக கூறினார்.
கொடநாடு வழக்கில் இபிஎஸ் 'ஏ1' குற்றவாளி என திண்டுக்கல் சீனிவாசன் கூறியதை சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ்நாடு அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கையை நேர்மறையாகப் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.