பட்டாசு ஆலை விபத்து எதிரொலி! சோதனைக்கு பயந்து 200 பட்டாசு ஆலைகள் மூடல்!

Prasanth K
திங்கள், 14 ஜூலை 2025 (16:38 IST)

சின்னக்காமன்பட்டியில் சமீபத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியான நிலையில், அரசு அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமாக 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த பட்டாசு ஆலைகள் முறையான பாதுகாப்பு வசதிகளுடன் இருப்பதாக வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை, மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அவ்வாறான விதிமுறைகள் பின்பற்றப்படாததே சின்னக்காமன்பட்டி ஆலை விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. 

 

இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறாக நடத்தப்படும் சோதனையில் பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை மீறியிருந்தால் உடனடியாக ஆலைகளுக்கு சீல் வைக்கப்படும்.

 

இதனால் இந்த அறிவிப்பு வெளியானதுமே விருதுநகரில் உள்ள சுமார் 200க்கும் அதிகமான பட்டாசு ஆலை உரிமையாளர்கள், உரிமம் ரத்தாகிவிடுமோ என பயந்து ஆலைகளை மூடி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

6 அபாயகரமான நாய் இனங்களுக்கு தடை: மீறி வளர்த்தால் நாய்கள் கைப்பற்றப்படும்: அதிரடி சட்டம்..!

பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து விடுகிறார்: முதல்வர் ஸ்டாலின்..!

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்வேன்: நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments