Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

Advertiesment
Annamalai

Prasanth K

, திங்கள், 14 ஜூலை 2025 (14:21 IST)

புதுக்கோட்டையில் பள்ளி கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த வீடியோ வைரலான நிலையில் முன்னாள் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இந்த சம்பவம் குறித்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஸிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட வீடியோவோடே பதிவிட்டுள்ள அண்ணாமலை “புதுக்கோட்டை மாவட்டம்  தேக்காட்டூர் ஊராட்சி, நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,  மாணவ மாணவியர்களை வைத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

 

தமிழகப் பள்ளிகள் ஏற்கனவே, வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல், சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவலநிலையில் உள்ளபோது, பத்து வயதுக்கும் குறைவான தொடக்கப்பள்ளி மாணவர்களைக் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருப்பது, பள்ளிக்கல்வித்துறை எத்தனை சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது.

 

இன்னும் ரசிகர் மன்ற மனப்பான்மையில் இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், கடந்த நான்கு ஆண்டுகளாக கல்வித்துறைக்குச் செய்தது, முதலமைச்சருடன் இணைந்து, விளம்பர நாடகங்களில் நடித்தது மட்டும்தான்.

 

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது சட்டப்படி குற்றம் என்பதாவது தெரியுமா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!