செங்கோட்டையனை அடுத்து மேலும் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்.. ஈபிஎஸ் அதிரடி..!

Siva
வெள்ளி, 7 நவம்பர் 2025 (08:06 IST)
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூத்த தலைவர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் மேலும் 12 பேரை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
 
ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய அதிரடி நடவடிக்கை தொடர்கிறது. நீக்கப்பட்டவர்களில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டப் பொருளாளர் சுந்தவேல் முருகன், முன்னாள் ஒன்றியத் தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ. முத்துசாமி மற்றும் அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ். ரமேஷ் உள்ளிட்டோர் அடங்குவர்.
 
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இவர்கள் அனைவரும் நீக்கப்படுவதாக ஈ.பி.எஸ். அறிவித்துள்ளார். இந்த தொடர்ச்சியான நீக்கங்கள், கட்சியின் தலைமை மற்றும் அதிகாரத்தின் மீதான ஈ.பி.எஸ்ஸின் கட்டுப்பாட்டை மேலும் பலப்படுத்துவதாகவும், தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments