அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸுடன் செங்கோட்டையனும் கலந்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் “அதிமுக நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்கோட்டையன் பார்வையிட்ட பிறகே ஜெயலலிதா ஒப்புதல் அளிப்பார். ஆனால் தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவிற்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் செங்கோட்டையன் ஈடுபடவில்லை. செங்கோட்டையன் பசும்பொன் வந்தது அரசியல் நிகழ்ச்சிக்காக அல்ல. அவரை தகுதியே இல்லாத எடப்பாடி பழனிசாமி நீக்கியிருப்பது. கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்துக் கொள்வதற்கு சமம்.
செங்கோட்டையன் சொன்னது போல துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுத்தால் அதை எடப்பாடி பழனிசாமிக்குதான் கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K