Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் சொன்னதெல்லாம் தப்பு.. உண்மை இதுதான்!? - TN Fact Check வெளியிட்ட தகவல்!

Advertiesment
TVK Vijay

Prasanth K

, ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (12:03 IST)

நேற்று நாகப்பட்டிணத்தில் தவெக பிரச்சாரத்தில் விஜய் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது

 

நேற்று நாகப்பட்டிணத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, நாகப்பட்டிணத்தில் மக்களுக்கு சரியான திட்டங்கள் கிடைக்கவில்லை என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். 

 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து பதிவிட்டுள்ள தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு கூறியுள்ளதாவது:

 

நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தவறான தகவல்கள்!

 

தவறான தகவல் 1 : 

 

“மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 

உண்மை :

 

தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள்/ அலையாத்திக் காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 

 

அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்தவை இன்று 90‌ சதுர கிலோமீட்டராக பெருகியுள்ளது. 

 

நாகப்பட்டினம் ‌ மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன. 

 

தவறான தகவல் 2 : 

 

கடல்சார் கல்லூரி ஏது

ம் நாகப்பட்டினத்தில் இல்லை.

 

உண்மை:

 

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது. 

 

தவறான தகவல் 3 :

 

மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அனுமதி இல்லை என்கிறார்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா?

 

உண்மை :

 

சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமரின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது.

 

தவறான தகவல்களைப் பரப்பாதீர்!” என்று கூறியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக ஐயப்பன் மாநாடு போஸ்டர்களில் ஐயப்பன் புகைப்படம் இல்லையா? பக்தர்கள் கண்டனம்