2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
நேற்றும் தாம்பரத்தில் நடந்த அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன் கலந்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, தே.ஜ கூட்டணி, விஜய் கூட்டணி, சீமான் தலைமையில் கூட்டணி என நான்கு கூட்டணிகள் களமிறங்க உள்ளன. எங்கள் நிலைபாட்டை டிசம்பர் மாதம் அறிவிப்போம். அமமுக தேர்தலுக்கான பிரச்சாரத்தை டிசம்பரில் தொடங்கும்.
2006 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதைவிட 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய்யும், தவெகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். விஜயகாந்த் வருகையால் அதிமுகவும், திமுகவுமே பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K