பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

Siva
ஞாயிறு, 21 டிசம்பர் 2025 (17:05 IST)
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியின் காரணமாக, வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெயர் விடுபட்டவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள், மீண்டும் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்க தேவையான 12 முக்கிய ஆவணங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 2026 ஜனவரி 1-ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தியடைபவர்கள் படிவம் 6-ஐயும், முகவரி மாறியவர்கள் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாக அளிக்கலாம்:
 
பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை , கடவுச்சீட்டு , ஓட்டுநர் உரிமம், வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புப் புத்தகம், ஜாதி சான்றிதழ், பள்ளி/பல்கலைக்கழகச் சான்றிதழ்கள், மத்திய/மாநில அரசு அடையாள அட்டை, பான் கார்டு, வன உரிமை சான்றிதழ் மற்றும் 1987-க்கு முன் அரசு வழங்கிய ஆவணங்கள்.
 
நேரடி முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள் Voter Helpline App அல்லது தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். ஜனவரி 18-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதச்சார்பின்மை பற்றி பேச முதல்வருக்கு எந்த தகுதியும் இல்லை: நயினார் நாகேந்திரன்

பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

தவெக ஜெயிக்காது.. விஜய் செய்றது தப்பு.. தெறிக்கவிட்ட ரங்கராஜ் பாண்டே...

மெஸ்ஸி இந்தியா வர சம்பளம் மட்டும் ரூ.89 கோடி.. மொத்த செலவு ரூ.100 கோடி.. அதிர்ச்சி தகவல்..!

தவெகவில் இணைந்த பத்திரிக்கையாளர் பெலிக்ஸ்!.. சவுக்கு சங்கர்தான் காரணமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments