Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி? மருத்துவமனையில் அனுமதி! – மக்கள் அதிர்ச்சி!

Advertiesment
Ganeshamoorthi

Prasanth Karthick

, ஞாயிறு, 24 மார்ச் 2024 (17:56 IST)
மக்களவை தேர்தல் பிரச்சார பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியிலிருந்து ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் போட்டியிடுகிறார். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு மதிமுக சார்பில் கணேசமூர்த்தி நின்று வெற்றி பெற்றிருந்தார்.

தற்போது இந்த தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்.பி கணேசமூர்த்தி பிரச்சாரம் செய்து வந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென கணேசமூர்த்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக கணேசமூர்த்தி தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததாகவும், இன்று அவர் சல்பாஸ் மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாதகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் காந்தியின் பேரன்.. சாதிதான் என் முதல் எதிரி..! திமுகவை ஆதரிப்பது ஏன்? – கமல்ஹாசன் அளித்த விளக்கம்!