Publish Date: Tue, 27 Dec 2022 (20:12 IST)
Updated Date: Tue, 27 Dec 2022 (20:13 IST)
எதிரிகளை வீழ்த்துவது மிக எளிது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியுள்ளார்.
அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்
கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக் கொள்ளும் என்றும் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக தான் முடிவு செய்யும் என்று கூறிய அவர் அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமையும் என்று கூறினார்
மேலும் அதிமுகவை நாம் வலுப்படுத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் போன்ற எதிரிகளை வீழ்த்துவது மிக எளிது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தொண்டர்களும் நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது என்று தெரிவித்த அவர் அதிமுகவை பாஜக எந்த விதத்திலும் கட்டுப்படுத்தியதில்லை என்றும் அவர் கூறினார்