Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செருப்பு மாலை போட்ட காங்கிரஸ் பிரமுகர்: வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

Advertiesment
annamalai
, செவ்வாய், 27 டிசம்பர் 2022 (20:07 IST)
தனது புகைப்படத்திற்கு செருப்பு மாலை போட்ட காங்கிரஸ் பிரமுகருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
தமிழக காங்கிரஸ் பிரமுகர் நிலவன் என்பவர் சமூகவலைதளத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை படத்திற்கு செருப்பு மாலை அணிவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்
 
 இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அண்ணாமலை இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நிலவன் என்பவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
அண்ணா வணக்கம்! செருப்பினால் மாலை அணிவித்து கவுரவம் தந்துள்ளீர்கள். செருப்பு புற அசுத்தங்களில் இருந்து நம்மை பாதுகாப்பது. நான் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் ஏற்றுள்ளேன். செருப்பு அணிவதில்லை. தாங்களும் தங்கள் அன்பான குடும்பமும் நலமுடன் வாழ சபரிமலை சாஸ்தாவை வேண்டுகிறேன்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்: தேவஸ்தானம் அறிவிப்பு!