Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தி.மு.க. ஆட்சியில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Advertiesment
எடப்பாடி பழனிசாமி

Siva

, செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (09:08 IST)
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க.  ஆட்சியில்ட 207 அரசுப் பள்ளிகள் தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்டுள்ளன" என்று குற்றம்சாட்டினார்.
 
கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க. அரசு ஒரு புதிய அரசு மருத்துவ கல்லூரியையோ அல்லது மருத்துவமனையையோ கூட தொடங்கவில்லை. இதற்கு திறமை வேண்டும், ஆனால் திறமையற்ற இந்த முதலமைச்சரிடம் அது இல்லை.
 
ஊழல் மட்டுமே தி.மு.க.வின் ஒரே சாதனை. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் "குடும்ப அரசியல்" மற்றும் கருணாநிதி குடும்பத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டும்.
 
அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்கள் தி.மு.க. அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் திட்டத்திற்கு நான் முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், தி.மு.க. அரசு அந்த பணிகளை துரிதப்படுத்த தவறிவிட்டது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எய்ம்ஸ் திட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட்டு விரைவில் திறக்கப்படும்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வரின் ஜெர்மனி பயணம் வெற்றி.. ₹7,020 கோடி மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள்