Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் இன்று மின்சார ரயில்கள் ரத்து! எந்தெந்த வழித்தடத்தில்? - முழு விவரம்!

Advertiesment
Electric Train

Prasanth Karthick

, வியாழன், 20 மார்ச் 2025 (09:52 IST)

சென்னை புறநகர் ரயில் வழித்தடத்தில் மேற்கொள்ளும் பராமரிப்பு காரணங்களுக்காக இன்று சில வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

அதன்படி, கவரப்பேட்டை - பொன்னேரி வழித்தடத்தில் மதியம் 1.20 முதல் மாலை 5.20 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

 

அதனால் மூர் மார்க்கெட்டிலிருந்து சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகின்றன.

 

சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை - மூர்மார்க்கெட் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை, நெல்லூர் - சூலூர்பேட்டை மெமு ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

 

செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி - தாம்பரம் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை! சம்மதம் சொன்ன ரஷ்யா - உக்ரைன்! - அமெரிக்காவின் அடுத்த மூவ்??