ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த மூன்றாடுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை நிறுத்த மேற்கொண்ட பேச்சுவார்த்தை சுமூக நிலையை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த போரை முடித்து வைக்க தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக அமெரிக்கா தொடர்ந்து இரு நாடுகளிடையே பலக்கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
அவ்வாறாக தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தற்போது இரு நாடுகளும் 30 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தி படி இருநாடுகளும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட பேச்சு வார்த்தைகளில் புதிய உடன்படிக்கையும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K