பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட இருக்கும் நிலையில், தாம்பரத்திலிருந்து திருச்சி செல்லும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை நேரத்தில் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், பயணிகளின் வசதியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, தாம்பரத்திலிருந்து திருச்சிக்கு ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் கோடைகால அதிவேக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும், இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் நாளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் அனைத்தும் அதிவேக ரயில்களாக இயக்கப்படுவதால், பயணிகளின் பயணம் மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
பயணிகள், இந்த சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இதுபோல், பிற நகரங்களுக்கும் சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.