Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏப்ரல் 23ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!...

Advertiesment
election
தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. வருகிற 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி முடிவடைகிறது. ஏப்ரல் 7ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று ஏப்ரல் 9ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது..

ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. ஒருபக்கம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது. அதன்படி தமிழக அரசு எந்த ஒரு புதிய திட்டத்தையும், அறிவிப்பையும் அறிவிக்க முடியாது.

ஒருபக்கம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து வருகிறது. ஏற்கனவே 42 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைய உத்தரவிட்டிருக்கிறது..

ஏனெனில் அன்று அலுவலகம் இருந்தால் நிறைய பேர் ஓட்டு போட வர மாட்டார்கள் என்பதால் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் கேரளா, புதுச்சேரி, அஸாம் ஆகிய மாநிலங்களில் வருகிற ஏப்ரல் 9ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29ம் தேதிகளில் விடுமுறை வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை குறித்து சர்ச்சை பேச்சு...சி.வி.சண்முகத்தை விளாசிய விஷால்