Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை குறித்து சர்ச்சை பேச்சு...சி.வி.சண்முகத்தை விளாசிய விஷால்

Advertiesment
vishal
அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான சி.வி. சண்முகம், தமிழ் முன்னணி நடிகை ஒருவர் குறித்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியது.  இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
 
 
இந்த நிலையில்  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
 
சமீபத்தில் திரையுலகைச் சேர்ந்த ஒரு முன்னணி நடிகையை நீங்கள் மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளீர்கள். இதற்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு சாதாரண மனிதனாக, ஒரு வாக்காளனாக, சமூக அக்கறை கொண்ட ஒரு குடிமகனாக, எல்லாவற்றுக்கும் மேலாகத் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக நான் உங்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு நடிகை குறித்து மிகவும் கொச்சையாகப் பேசியுள்ளீர்கள். அவர் இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு முன்னணி நடிகை மேலும் அவர் ஒரு குடும்பத் தலைவியும் கூட. அவரைப் பற்றி இப்படிப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?" கூட்டத்தில் கைதட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக ஒருவரைக் கொச்சைப்படுத்திப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. அதற்குப் பதிலாக, நீங்கள் மக்களுக்கு என்னென்ன நலத்திட்டங்களைச் செய்யப் போகிறீர்கள் என்பதை அறிவித்து, அதன் மூலம் கைதட்டல் வாங்கினால் அது மிகவும் சிறப்பாக இருக்கும்."
அம்மா ஆட்சிக் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு மட்டுமின்றி, அவர்களுக்கு உரிய மரியாதையும் அளிக்கப்பட்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பதை விட, இதுபோன்ற பேச்சுகளின் மூலம் உங்கள் மரியாதையை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்றுதான் சொல்ல விரும்புகிறேன்  என விஷால் அந்த வீடியோவில்  கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டாய திருமணத்தால் சித்திரவதை.. விவாகரத்து செய்துவிட்டு புதிய திருமணம்.. 92 வயது தேவேகவுடா பேச்சு