அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கியது. மாநிலம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில், அரசியல் முக்கியத்துவம் ஒருபுறம் இருக்க, உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள பிரம்மாண்டமான சைவ மற்றும் அசைவ உணவுப் பட்டியல் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
காலை உணவு: நிர்வாகிகளுக்காகக் காலை சிற்றுண்டியாக, கேசரி, வடை, பொங்கல், இட்லி ஆகியவற்றுடன் சாம்பார், காரச் சட்னி, தேங்காய் சட்னி, மற்றும் காபி/டீ ஆகியவை வழங்கப்படுகின்றன.
அசைவ பிரியர்களைக் கவரும் வகையில், மதிய உணவில் பிரட் அல்வா இனிப்புடன், மட்டன் பிரியாணி பிரதானமாக இடம்பெறுகிறது. அதனுடன், தாளிச்சா, ஆனியன் தயிர் பச்சடி, கத்திரிக்காய் கட்டா, மட்டன் குழம்பு, சிக்கன் 65, மற்றும் சுவையான வஞ்சரம் மீன் வறுவல், முட்டை மசாலா ஆகியவை சிறப்பு உணவுகளாக உள்ளன. மேலும், வெள்ளை சாதம், தக்காளி ரசம், தயிர், இஞ்சி புளி மண்டி, மற்றும் பருப்பு பாயாசம் ஆகியவையும் பட்டியலில் உள்ளன.
சைவ உணவு விரும்புவோருக்காக, தம்ஃப்ரூட் அல்வா, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாம்பார், வற்றல் குழம்பு, தக்காளி ரசம், தயிர், மற்றும் பருப்பு பாயாசம் ஆகியவை உள்ளன. புடலங்காய் கூட்டு, சைனீஸ் பொரியல், மாவடு இஞ்சி, உருளை மசாலா, பருப்பு வடை, அப்பளம் எனப் பலவகையான துணை உணவுகளும் வழங்கப்படுகின்றன.