செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

Bala
திங்கள், 24 நவம்பர் 2025 (18:50 IST)
வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் என்கிற பெயரில் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி ஆளும் பாஜக அரசால் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் துவங்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு திமுக அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், நீதிமன்றம் சென்றும் பலன் அளிக்கவில்லை. தற்போது தமிழகத்தில் பலரும் SIR விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்து விட்டனர், இன்னும் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.
 
ஒருபக்கம் இந்த திட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. ஏனெனில் இந்த திட்டத்தால் ஒரு கோடிக்கும் மேல் வாக்குகளை இழப்பார்கள் என திமுக சொல்லி வருகிறது. ஆனால் பாஜகவினரோ ‘நிறைய போலியான வாக்குகள் இருக்கிறது. ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் வாக்குகள் இருக்கிறது.. இறந்து போனவர்களின் பெயர்களில் வாக்குகள் பதிவாகி வருகிறது. அதை தடுப்பதற்காகவே இந்த பணி’  என சொல்லி வருகிறது.
 
பாஜக கூட்டணி அதிமுகவில் இருப்பதால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘SIR வரக்கூடாது என திமுக துடிக்கிறது. ஏனில் இறந்தவர்களை வைத்து ஓட்டு வாங்க திமுக முயற்சி செய்யும்.. அவர்களுக்கு அது கைவந்த கலை. அதனால்தான் இந்த திட்டம் வரக்கூடாது என துடிக்கிறார்கள். ஆளுங்கட்சி அவர்கள்தான்.. ஆனால் ஏன் பயப்படுகிறார்கள்?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
 
மேலும் ‘பொறுப்பில் இருக்கும் டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு அடுத்த டிஜிபி நிறுவனம் செய்வது தொடர்பான பட்டியலை மாநில அரசுதான் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் திமுக அரசு அதை செய்யவில்லை’  எனவும் அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments