Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய் கேப் விட்டு படு... நாய்களும் ஃபாலோ செய்யும் Social Distance!!

Advertiesment
ஓய் கேப் விட்டு படு... நாய்களும் ஃபாலோ செய்யும் Social Distance!!
, புதன், 25 மார்ச் 2020 (12:58 IST)
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள சமூக விலகலை கடைப்பிடிக்கும் படி அறிவுத்தப்பட்டு வருகிறது. 

 
ஆம், இந்தியாவில் தொடர்ந்து வரும் கொரோனா அச்சுறுத்தலால் பொது இடங்களில் இடைவெளியை காக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் மதுக்கடைகளில் மது வாங்க வருபவர்கள் வரிசையில் நிற்கவும், வரிசைக்கு இடையே போதிய இடைவெளியை நீடிக்கவும் செய்துள்ளனர்.
 
இந்நிலையில் தமிழகத்திலும் அதே முறை நடைமுறைக்கு வந்தது. போதிய இடைவெளிகளில் வரிசையாக கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. ஒரு கட்டத்திலிருப்பவர் அடுத்த கட்டம் நகர்ந்ததும், பின்னால் இருப்பவர் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இதனிடையே நாய்களும் இந்த சமூக விலகலை பின்பற்றுகின்றன போல. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் தூங்கும் நாய்களின் இந்த புகைப்படம் சமூக விலகலை உணர்த்துவது போல உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கையெடுத்து கும்பிட்ட போலீஸ் – நெகிழ செய்த சம்பவம்!