இன்னும் 6 மாத காலம் வரை கொரோனா பாதிப்பு நீடித்தால் என்ன நடக்கும் என என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளதகாவும், கொரோனாவுக்கு குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41 என மத்திய சுகாதார அமைச்சகம் சற்றுமுன் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இந்த தொற்று மேலும் பரவாமல் இருக்கு நள்ளிரவு முதல் நாடு முடுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் 6 மாதங்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் திவால் சட்டத்தை மறு பரிசீலனை செய்யும் நிலை ஏற்படலாம் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் விரிவாக தெரிவித்ததாவது, கொரோனா அச்சம் இன்னும் 6 மாதங்களுக்கு நீடிக்குமானால் திவால் சட்டத்தின் சட்டப்பிரிவுகள் மாற்றம் குறித்து அரசு ஆலோசிக்கும். திவால் சட்டத்தின் கீழ் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கான அபராதத் தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பெரிய அளவில் கடன் பெற்று கடன் தொகையை திருப்பிச் செலுத்தாதோருக்கான ஒழுங்குமுறையக் கொண்டு வர, வாராக்கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியாகவே திவால் சட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.