மக்கள் வெளியே செல்லும் போது முறையான ஐடி-க்கள், டாக்குமெண்டுக்களை எடுத்துக்கொண்டு செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. எனவே நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி மக்கள் பதற்ற நிலையை புரிந்துக்கொள்ளாமல் வெளியே சென்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் 144 தடை உத்தரவி கண்காணிக்க சென்னை மாநகராட்சி சார்பில் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது...
ஒரு இஅடத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது, மீறினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் தான் வெளியே செல்ல வேண்டும் இவர்கள் போகக்கூடாது என குறிப்பிட்டு சொல்ல இயலாது. முடிந்து வரை வெளியே செல்வதை தவிர்க்கவும். அவசியமானவற்றுக்கு மட்டும் வெளியே செல்லவும்.
அப்படி செல்லும் போது முறையான ஐடி-க்கள், டாக்குமெண்டுக்களை எடுத்துக்கொண்டு செல்லவும். சாலையோரம் உள்ளவர்கள், வேறு எங்கும் செல்ல இயலாதவர்கள் எவ்வளது நாட்கள் வேண்டுமானாலும் மாநகராட்சி காப்பகங்களில் தங்கலாம் என தெரிவித்துள்ளார்.