Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த 74 வயது தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ: திண்டுக்கல்லில் சர்ச்சை

Advertiesment
உதயநிதி ஸ்டாலின்

Siva

, வெள்ளி, 10 அக்டோபர் 2025 (12:19 IST)
தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இரண்டு நாட்கள் பயணமாகத் திண்டுக்கல் மாவட்டத்துக்கு சென்றார். அப்போது வேடசந்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 49 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
 
அப்போது, மேடைக்கு வந்த வேடசந்தூர் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் துணை சபாநாயகருமான காந்திராஜன், உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்த பிறகு, திடீரென அவரது காலில் விழுந்து வணங்கினார்.
 
74 வயதான எம்.எல்.ஏ காந்திராஜன் தன்னைவிட பல வயதில் மிகவும் இளையவரான உதயநிதியின் காலில் காந்திராஜன் விழுந்ததை கண்டு, உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்து, அவ்வாறு செய்ய கூடாது என்று தடுத்தார். அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம், அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த காந்திராஜன், கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்தும் இவ்வாறு செய்தது பல விவாதங்களை கிளப்பியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்வாண போட்டோ அனுப்பு, இல்லையேல் இண்டர்னல் மார்க்கில் கைவைத்துவிடுவேன்: மாணவியை மிரட்டிய பேராசிரியர்..