Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் கேட்ட 70 சீட்!.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த மு.க.ஸ்டாலின்!...

Advertiesment
MK Stalin

Bala

, வெள்ளி, 5 டிசம்பர் 2025 (10:45 IST)
தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. எந்த கட்சியுடன் யார் கூட்டணி வைக்கப் போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பும் மக்களிடம் எழுந்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம்?..எத்தனை தொகுதிகளை கேட்கலாம்? என்கிற ஆலோசனையில் இருக்கிறார்கள்.
 
திமுகவை பொறுத்தவரை வழக்கம்போல் காங்கிரஸ், முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகளுடன் ஏற்கனவே வைத்திருந்த கூட்டணி இந்த தேர்தலிலும் தொடரவிருக்கிறது. 
ஒருபக்கம் இந்த முறை திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும் என்கிற முடிவில் காங்கிரஸ் இருக்கிறது. திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில்தான் இந்த ஐவர் குழு கடந்த 3ம் தேதி சென்னை அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் மு.க ஸ்டாலினை சந்தித்தது. 
அப்போது எங்களுக்கு 70 தொகுதிகள் வேண்டும்.. மேலும் ஆட்சியிலும் பங்கு கொடுங்கள் என அவர்கள் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. ஆனால் ஸ்டாலின் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம்.
 
திமுக தரப்பில் இன்னும் குழு அமைக்கப்படவில்லை.. அமைத்ததும் இது பற்றி பேசுவோம் என சொல்லி அனுப்பிவிட்டாராம். அதேநேரம் 70 தொகுதியை திமுக கொடுக்க வாய்ப்பு இல்லை.. அதிலும் எதிர்க்கட்சியாக கூட திமுக அமருமே தவிர ஆட்சியில் பங்கு என்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. திமுக சரித்திரத்திலேயே அது இல்லை என்கிறார்கள் திமுகவினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் கேட்ட 70 சீட்!.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த மு.க.ஸ்டாலின்!...