தீபாவளிக்கு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வரும் நிலையில் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அக்டோபர் 20ம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. முந்தைய 2 நாட்களுமே வார இறுதி என்பதால் மக்கள் வியாழன், வெள்ளி கிழமைகளிலே சொந்த ஊர்களுக்கு தீபாவளி கொண்டாட புறப்பட ஆயத்தமாகி வருகிறார். இதற்கான அரசு பேருந்து, ரயில் முன்பதிவுகள் முடிந்துவிட்ட நிலையில் பலரது தேர்வு தனியார் ஆம்னி பேருந்துகளாக உள்ளது.
இந்த தீபாவளி சீசன் சமயத்தில் டிமாண்ட் காரணமாக ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலையை உயர்த்துவது வழக்கமாக உள்ளது. அவ்வாறாக இந்த முறையும் திடீரென ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல ரூ1800 என்ற அளவில் இருந்த கட்டணம் தற்போது ரூ5000 ஆகவும், சென்னை - மதுரை செல்ல ரூ.1,100 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.4,100 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. இது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K