Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செட் துணி + சர்க்கரை = ரூ.1000: தீபாவளிக்கு தாராளம் காட்டும் அரசு!

Advertiesment
செட் துணி + சர்க்கரை = ரூ.1000: தீபாவளிக்கு தாராளம் காட்டும் அரசு!
, புதன், 31 அக்டோபர் 2018 (19:30 IST)
புதுச்சேரியில் தீபவளிக்கு மக்களுக்கு என்ன பரிசுகள் வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி சர்க்கரை வழங்க கவர்னர் கிரண்பேடி அனுமதிக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு எப்படியும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புதுச்சேரி அரசு செயல்பட்டுள்ளது. 
 
அதன்படி, அரசு அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச சர்க்கரை, துணிகளுக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணத்தை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் துணியை கணக்கிட்டும் அதற்கான பணம் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்த விரிவான தகவல், தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச கைலி, சேலை, 2 கிலோ சர்க்கரை ஆண்டுதோறும் வழங்கப்படும்.
 
ஆனால், இந்த ஆண்டு ரொக்க பணமாக வழங்க எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனடிப்படையில் ஒரு செட் துணி, 2 கிலோ இலவச சர்க்கரைக்கு ஈடாக அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 வழங்க முடிவு செய்துள்ளோம்.
 
இந்த தொகை ரேசன் கார்டுதாரர்களின் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஓரிருநாளில் இத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத நிந்தனை செய்த கிருஸ்தவ பெண் பாகிஸ்தானில் விடுதலை...