Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கஞ்சா அடித்துவிட்டு திருடும் இளைஞர்...போலீஸிடம் சிக்கினான்...

Advertiesment
கஞ்சா அடித்துவிட்டு திருடும் இளைஞர்...போலீஸிடம் சிக்கினான்...
, வெள்ளி, 19 அக்டோபர் 2018 (15:41 IST)
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நைனார் மண்டபம் பகுதியில் வசித்து வருபவர்  தனலட்சுமி. இவர் கடந்த மாதம் 7ஆம்தேதி வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது அவரிடமிருந்து கைப்பையை  ஒரு இளைஞர் பறித்துச்சென்றுள்ளார்.
அதில் பணம் ரூ 10000 இருந்துள்ளது. இதனையடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் தனலட்சுமி புகார் கொடுத்ததையடுத்து புகாரின் அடிப்படையில் திருட்டு நடைபெற்ற பகுதியிலிருந்த சிசிடிவி கேமரவை காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். 
 
அப்போது அதில் தெரிந்த ஒரு இரு சக்கர வாகன எண்ணை அடைப்படியாகக் கொண்டு போலீஸார் தம் விசாரனையை தொடங்கினர்.
 
அடுத்த சில நாட்களில் பணத்தை திருடிச்சென்ற ராஜேஷ் என்பவனை பிடித்து கைது செய்தனர்.
 
இதுகுறித்து போலீஸார் குறியதாவது:
 
20 வயதே ஆன ராஜேஷ் புதுச்சேரியில் சொக்கநாதன் பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார்.
 
வேலையில்லாமல் சுற்றித்திரிந்த அவர்,கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி, பின் கஞ்சா குடிப்பதற்கென்றே திருடும் நிலைக்கு வந்துள்ளார்.
 
அப்போது ஒருநாள் தனலட்சுமு பணத்துடன் சென்றுகொண்டிருந்த போது அவரிடம் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.இவ்வாறு தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவின் ஆட்சிக்காக ஏங்கும் மக்கள்: ஸ்டாலின்