திண்டுக்கலில் கொரோனா தடுப்பூசி போட்ட கூலித் தொழிலாளி மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் திண்டுக்கலில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் செம்பட்டியை சேர்ந்த விவசாய கூலியான 53 வயது ராஜா என்பவர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். பின்னர் தனது மகள் நாகலட்சுமியை சமத்துவபுரத்தில் விட்டுவிட்டு வீடு திரும்பியவர். மயக்கம் மற்றும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அவரை அவரது உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் மற்றும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.