மசினக்குடியில் நான்கு பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை கொல்லக் கூடாது என இயற்கை ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நீலகிரி தேவன் எஸ்டேட் பகுதியில் மூன்று பேர் மற்றும் பசுமாடுகளை ஆட்கொல்லி புலி ஒன்று கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டனர்.
ஆனால் அனைத்திலும் தப்பிய புலி தேவன் எஸ்டேட்டிலிருந்து மசினக்குடி நோக்கி நகர்ந்ததுடன் அங்கு மாடு மேய்த்த ஒருவரையும் அடித்துக் கொன்றது. அதிகமான மனித பலிகள் ஏற்பட்டு வருவதால் ஆட்கொல்லி புலியை தேவைப்பட்டால் சுட்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விலங்குகள் ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு புலி ஆட்கொல்லியாக இருக்கிறது என்பதற்கான எந்த அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே புலியை சுட்டு பிடிக்க தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.