Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நல்லா வெள்ளாட்டு கறியா வெச்சாங்க பாரு..! – ஆண்கள் மட்டும் நடத்தும் கறி விருந்து!

Advertiesment
நல்லா வெள்ளாட்டு கறியா வெச்சாங்க பாரு..! – ஆண்கள் மட்டும் நடத்தும் கறி விருந்து!
, திங்கள், 4 அக்டோபர் 2021 (10:58 IST)
கமுதியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று நடத்தும் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவின் சிறப்பே ஆண்கள் மட்டுமே இந்த திருவிழாவை நடத்துவதுதான். முந்தைய காலத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பெண்ணாக இருந்த சமயம் சக பெண்களால் துன்புறுத்திக் கொள்ளப்பட்டதாகவும், அதனால் தனக்கு திருவிழாவை ஆண்களே நடத்த வேண்டும் என எல்லைப்பிடாரி அம்மன் கேட்டதன் பேரில் ஆண்டுதோறும் ஆண்களே இந்த திருவிழாவை கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்ட நிலையில் 47 கிடா ஆடுகள் வெட்டப்பட்டு அனைவருக்கும் கறிவிருந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த படையலை எடுத்து செல்லக் கூடாது என்பதால் மீத படையலை குழி தோண்டி புதைத்துள்ளார்கள். இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அசைவ பிரியர்கள் பலர் இதுகுறித்து சுவாரஸ்யமாக பதிவிட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றோடு முடியும் உள்ளாட்சி தேர்தல் பரப்புரை!