சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும், சசிகலா, தினகரனை கழற்றிவிட்டுவிட்டு அவர்களுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். இதனால் தினகரனின் பிரதான எதிரியாக மாறினார் எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடி பழனிச்சாமியால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த தினகரன் தனது ஆதரவாளர்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை கவிழ்க்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை அனைவரும் எதிர் நோக்கி உள்ளனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு இன்னும் ஒரு மாதம் தான் என தினகரன் கூறி வருகிறார். இந்த சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச அவரது உதவியாளர் கார்த்தியை தொடர்பு கொண்டுள்ளார் தினகரன்.
சில தினங்களுக்கு முன்னர் தினகரனிடம் இருந்து எடப்பாடியின் உதவியாளர் கார்த்திக்கு போன் போயிருக்கிறது. நான் எடப்பாடிக்கிட்ட பேசனும், போனை அவருகிட்ட கொடுங்க என தினகரன் கூறியிருக்கிறார். அதற்கு கார்த்தி, அண்ணன் ரொம்ப பிஸியாக இருக்கிறார், நான் அப்புறமா கால் பண்ணி தரேன் சார் என கூறியிருக்கிறார்.
ஆனால் திரும்ப கால் வரவில்லை. இதனையடுத்து தினகரன் மீண்டும் அன்று இரவு கால் செய்திருக்கிறார். அப்போதும் அண்ணன் பிஸி என கார்த்தி கூறியிருக்கிறார். இதனையடுத்து அடுத்த நாள் காலை மீண்டும் தினகரன் கால் செய்ய கார்த்தி பழைய பஞ்சாங்கமான அண்ணன் பிஸி என்பதையே கூறியிருக்கிறார்.
இதனால் டென்ஷனான தினகரன், என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? நாங்க என்ன வேலை வெட்டி இல்லாமல் இருக்கோமா? போன் பண்ணினால் அவருகிட்ட கொடுக்க வேண்டியதுதானே, அப்படி என்ன அவரு பிஸியா இருக்காரு? என கொந்தளித்தாராம் தினகரன். ஆனால் கார்த்தி பதில் எதுவுமே சொல்லாமல் போனை வைத்துவிட்டாராம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.