Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 28 April 2025
webdunia

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி- டிடிவி. தினகரன்

Advertiesment
முன்னாள் பிரதமர்கள் சரண் சிங்

Sinoj

, வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (14:43 IST)
முன்னாள் பிரதமர்கள் சரண் சிங்,  நரசிம்ம ராவ் மற்றும் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி இன்று அறிவித்துளார்.
 
 
இந்த நிலையில்,விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளதாவது:

''இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்குவதில் முன்னோடியாக திகழ்ந்த விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
 
நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்தியாவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்திப் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கிய பெருமை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களையே சாரும்.
 
கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக ஏற்கனவே பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசண் ஆகிய விருதுகளை பெற்றிருக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பாரத ரத்னா விருது கூடுதல் பெருமை சேர்த்துள்ளது.
 
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப்பிரதமரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான திரு.எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் சரண்சிங் மற்றும் நரசிம்மராவ் ஆகிய மூவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவர்கள் ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''விஷால் அரசியலுக்கு வந்து ஜெயித்துக் காட்டுவார்''- விஷாலின் தந்தை