Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் வெற்றி உங்கள் கையில் உள்ளது.! வெற்றிக்காக உழைக்க வேண்டும்.. புஸ்ஸி ஆனந்த்.!!

Advertiesment
bussy anand

Senthil Velan

, வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (11:10 IST)
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம், வெற்றி பெற உண்மையாக உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளை புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை அவர் பதிவு செய்துள்ளார். வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் நடிகர் விஜய் தெரிவித்திருந்தார்.

அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரியை ஒரு சிலர் விமர்சித்தும், ஒரு சிலர் வரவேற்றும் வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மத்தியில் பேசிய, அகட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 2026 தேர்தல் வெற்றிக்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்றார். 

 
தேர்தல் வெற்றி உங்கள் கையில் உள்ளது என்றும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நமது ஒரே தலைவர் விஜய், ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் நிற்பதாக கருத வேண்டும் என்றும் அவரது வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றும் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரலாறு காணாத அளவிற்கு பூண்டு விலை உயர்வு..! ஒரு கிலோ ரூ.500-யை தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி..!