தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், விஜயகாந்த், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், ஆகியோரைத் தொடந்து புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
தன் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று விஜய் அறிவித்து, புதிய அறிக்கையும் வெளியிட்டு, தன் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
நடிகர் விஜய்யைத் தொடர்ந்து, விஷால் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் விஷால் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், மக்கள் நல இயக்கத்தின் மூலம் மக்கள் பணிகளிய தொடர்ந்து செய்வேன். வரும் காலக்கட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுத்தால் மக்களுக்காக குரல் கொடுக்கவும் தயங்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், விஷாலின் தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி விஷாலின் அரசியல் வருகை சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது:
''ஏழைகளுக்கு உதவி செய்யும் எண்ணம் விஷாலுக்கு சிறு வயதில் இருந்தே உள்ளது. தன்னிடம் பணம் இல்லை என்றால் கடன் வாங்கியாவது உதவுவார். தற்போது, தனது தாயார் தேவி பெயரில் அறக்கட்டளை தொடங்கி,ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவுகிறார். அவரது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் எண்ணத்தில் உள்ளார். நிச்சயம் அவர் அரசியலுக்கு வந்து, ஜெயித்துக் காட்டுவார் ''என்று தெரிவித்துள்ளார்.