வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறையின் கீழ், கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று முடிவடைய இருந்த காலக்கெடுவை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை டிசம்பர் 14 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அல்லது வாக்காளர் உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட படிவங்களின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்படும்.
டிசம்பர் 14-க்குள் படிவத்தை சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறாது.
வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், உரிமைகோரல் காலத்தில் படிவம் 6-ஐ பயன்படுத்தி புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.