பிகார் மாநிலம் பக்சரை சேர்ந்த கோலு யாதவ் என்ற இளைஞர், ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அனாதை பெண் ஒருவரை மீட்டு திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
ரயில் பயணத்தின்போது, பயணிகள் சிலர் அந்த பெண்ணிடம் தவறாக பேசியதையும், நடக்க முயன்றதையும் கவனித்த கோலு, அந்த பெண்ணின் பாதுகாப்பிற்காக அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார். அனாதையான அந்தப் பெண் எதிர்கொண்ட சிரமங்களை பற்றித் தனது பெற்றோரிடம் கோலு எடுத்துரைத்தார்.
கோலுவின் குடும்பத்தினர் அந்த பெண்ணுக்கு அடைக்கலம் அளித்து உதவினர். நாட்கள் செல்ல, அந்தப் பெண்ணின் நல்ல குணத்தை புரிந்துகொண்ட கோலுவின் பெற்றோர்கள், தங்கள் முழு சம்மதத்துடன் கோலுவுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.
மனிதநேயம் நிறைந்த இந்த செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளதுடன், இந்தத் தம்பதியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பலரின் பாராட்டுகளை பெற்று வருகின்றன.