வங்கக்கடலில் உருவாகிறது 'சென்யார்' புயல்.. தமிழக கடற்கரையை தாக்குமா?

Siva
வியாழன், 20 நவம்பர் 2025 (16:24 IST)
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நவம்பர் மாத இறுதியில் வங்கக் கடலில் 'சென்யார்' என்ற புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளது.
 
வானிலை நிபுணர் ஹேமச்சந்திரன் கூற்றுப்படி, சென்யார் புயல் தமிழக கடற்கரையை தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்கிறது. எனினும், அதன் தீவிரம் மற்றும் கரையை கடக்கும் இடம் குறித்து இப்போதே துல்லியமாக கணிக்க முடியாது.
 
தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை, அடுத்த 2-3 நாள்களில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலை நோக்கி நகரக்கூடும். இது நவம்பர் 22-23க்குள் குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருப்பெற வாய்ப்புள்ளது.
 
இதன் காரணமாக, நாளை முதல் அடுத்த 3-4 நாள்களுக்கு தென் தமிழகம், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். சென்யார் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பெயரிட்டது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

வங்கக்கடலில் உருவாகிறது 'சென்யார்' புயல்.. தமிழக கடற்கரையை தாக்குமா?

விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு: சேலத்தில் டிச. 4ல் நடக்கவிருந்த தவெக கூட்டம் ரத்து!

கோவை, மதுரை மெட்ரோ: 2026 ஜூன் மாதத்திற்குள் திட்டம் வரும் - நயினார் நாகேந்திரன் உறுதி!

பீகாரில் 10வது முறையாக முதலமைச்சர் ஆனார் நிதீஷ் குமார் : 2 துணை முதல்வர்கள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments