Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

SIR பெயரில் ஒரு சைபர் க்ரைம்.. போலி APK ஃபைல்களை க்ளிக் செய்ய வேண்டாம்..

Advertiesment
Cyber Crime

Siva

, செவ்வாய், 2 டிசம்பர் 2025 (14:35 IST)
நாளுக்கு நாள் பெருகி வரும் சைபர் குற்றவாளிகள், நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை பயன்படுத்திப் பணத்தை பறித்து வருகின்றனர். தற்போது, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் தொடர்பான பணிகளை பயன்படுத்தியும் புதிய மோசடி அரங்கேறி வருகிறது.
 
சைபர் குற்றவாளிகள், வாட்ஸ்அப் மூலம் 'SIR Election Commission.apk' போன்ற APK ஃபைல்களை அனுப்பி, "வாக்காளர் விவரங்களை அறிந்துகொள்ள" என்ற பெயரில் அதை கிளிக் செய்யுமாறு பொதுமக்களை தூண்டுகின்றனர்.
 
இந்த APK ஃபைல்களை இன்ஸ்டால் செய்தாலோ அல்லது கிளிக் செய்தாலோ, சம்பந்தப்பட்டவரின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டு, வங்கிக்கணக்கில் உள்ள பணம் முழுவதுமாக திருடப்பட வாய்ப்பு உள்ளது.
 
சைபர் கிரைம் போலீஸார் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'SBI reward.apk', 'RTO challan.apk', 'KYC/Aadhar update.apk' போன்ற பெயர்களில் வரும் எந்தவொரு லிங்க் அல்லது APK ஃபைல்களையும் எக்காரணம் கொண்டும் கிளிக் செய்யவோ, இன்ஸ்டால் செய்யவோ கூடாது என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியலில் எந்தப் புயல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க. தயார்: தங்கம் தென்னரசு