Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்குக் கொரோனா உறுதி! மளமளவென உயரும் எண்ணிக்கை!

Advertiesment
Koimbedu
, செவ்வாய், 5 மே 2020 (07:52 IST)
கடலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 68 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும் அங்கு வந்த மக்களால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அங்குள்ள பூக்கடையில் வேலை செய்யும் 3 ஆண்களுக்கு தொற்று இருப்பது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அங்கு வேலைப்பார்த்தவர்கள் மற்றும் அங்கிருந்து வீடு திரும்பியவர்கள் என ஒவ்வொருவராக வரிசையாக தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம்தான். கோயம்பேட்டில் இருந்து திரும்பிய 122 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா எண்ணிக்கை 150 ஐ தாண்டியது.

இந்நிலையில் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 68 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.  இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் கடைசியில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள்! வெளியானது அறிவிப்பு!