Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடுத்து விட்டதாக கூறிய மருத்துவர் மீது அரசு புகார் !போலீஸார் நடவடிக்கை !

Advertiesment
medicine for corona
, திங்கள், 4 மே 2020 (22:05 IST)
சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது.இந்தியாவில் மூன்றாது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் அன்றாடமும் கொரொனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரொனா பரவி வருகிறது.  இங்கு வந்து சென்றவர்கள் மூலமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், கோவிட் 19 எனும் கொடூர கொரொனா வைரஸ் குறித்து வாட்ஸ் ஆப் சமூக வலைதளங்கள் ஆகியவற்றில், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப்பணிகள் இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியினின்றி தகவல் பரப்புதல் Tne Epidemic Act And Regulation என்ற பிரிவு 8  -ன் படி தடைசெய்யப்ப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறிய திருத்தணிகாசலம் மீது அரசு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகார் குறித்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7ஆம் தேதி முதல் மதுபானக்கடை திறப்பு….பேரதிர்ச்சி தருகிறது - சீமான்