Publish Date: Tue, 05 May 2020 (07:41 IST)
Updated Date: Tue, 05 May 2020 (08:15 IST)
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 3 ஆம் தேதிக்குப் பின் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என தெரிகிறது.
அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. மேலும் சமூக இடைவெளியுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.