காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டணியில் இருக்கிறது. கலைஞர் முதல்வராக இருந்தபோது சோனியா காந்தியுடன் திமுகவுக்கு நல்ல இணக்கமான உறவு இருந்தது. தற்போது ஸ்டாலின் முதல்வராக இருக்கும் நிலையில் அதை இணக்கமான உறவை அவர் ராகுலிடமும் பின்பற்றி வருகிறார்.
மத்தியில் கடந்த மூன்று முறை காங்கிரஸ் தோல்வியை சந்தித்தாலும் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறடு. அதேநேரம், 2021 தேர்தலில் திமுக கொடுத்த குறைவான தொகுதிகளை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் 2026 தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறது. ஆனால் திமுகவோ 25 தொகுதிகளுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம்.
திமுகவுடன் எத்தனை தொகுதிகள் என பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே காங்கிரஸ் தலைவர் நயினர் நாகேந்திரன் உள்ளிட்ட ஐவர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை நியமித்திருக்கிறது
. சில நாட்களுக்கு முன்பு கூட அந்த 5 பேரும் அறிவாலயம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவில் இதுபற்றி முழுமையாக பேசி முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸின் தலைவர் செல்வப் பெருந்தகை மு.க.ஸ்டாலினிடம் கறாராக பேசி அதிக சீட்டுகளை வாங்குவார் என்கிற நம்பிக்கை காங்கிரஸ் தலைமைக்கு இல்லையாம். அவரின் அப்ரோச் மிகவும் சாஃப்ட்டாக இருப்பதால் அவரை தூக்கிவிட்டு தலைவர் பதவியில் வேறு யாரையாவது நியமிக்கலாமா என்றும் காங்கிரஸ் தலைமை யோசித்து வருவதாக செய்திகள் கசிந்திருக்கிறது.