Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

போதை பொருள் மற்றும் குழந்தைகள் பாலியல் தடுக்கும் வண்ணமாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 78 கி.மீ சைக்கிள் பேரணி.

Advertiesment
Coimbatore police commissioner balakrishnan

J.Durai

, சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:30 IST)
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பாதித்து வருவதாலும் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாலியல் கொடுமையை தடுக்கும் விதமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 78 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணியாக சென்றார்.
 
இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் 
பேரணி தொடங்கியது.
சைக்கிள் 
பேரணியில் 16 வயது முதல் பெரியவர் வரை பேரணியில் கலந்து கொண்டனர்.
 
சைக்கிள் பேரணியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
 
பின்னர் காவல் அனைவரும் பொதுமக்களுடன் சேர்ந்து சைக்கிள் பேரணியில் பயணம் செய்தார்.பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
பேரணி காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து தொடங்கி டவுன் ஹால்,செட்டி வீதி,பேரூர், பச்சாபாளையம்,ஆலந்துறை, மாதம்பட்டி,சாடி வயல்,ஈசா யோகா சென்று அடையும்.அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக வந்து இறுதியாக அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறைவடையும்.சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டவரகள் மைதானத்தில் உறுதிமொழி எடுத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் தாமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர்