Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

J.Durai

மதுரை , புதன், 26 ஜூன் 2024 (16:02 IST)
கள்ளக்குறிச்சி சம்பவம், தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சரக காவல் துறையினர் மற்றும் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து,போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
 
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில்,துவங்கிய இந்த பேரணியை, உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
 
கவணம்பட்டி ரோடு, பேரையூர் ரோடு, தேனி ரோடு என, உசிலம்
பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று தேவர் சிலை அருகில் நிறைவுற்ற இந்த பேரணியில்,போதை பழக்கங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
 
உசிலம்பட்டி காவல் துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள்  என நூற்றுக்கும் அதிகமானோர் இந்த பேரணியில், கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவுக்கு ஓட்டு போட்ட மனைவியை விவாகரத்து செய்த கணவன்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு..!