Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் -போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்!

Advertiesment
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் -போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்  வழங்கினார்!

J.Durai

, வெள்ளி, 19 ஜூலை 2024 (14:50 IST)
மதுரை மேற்கு (தெற்கு) ஊராட்சி ஒன்றியம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சமயநல்லூர் ஊராட்சியில் போதை பொருள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மகேந்திரன், மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தார். 
 
ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் வரவேற்றார். சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் பெருகிவரும் விஷச்சாராய மரணம் குறித்தும், அதனை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார்.
 
தொடர்ந்து ஊர்வலமாக நடந்து சென்று கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.
 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் மனோகரன், நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல், திருப்பதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடவுள் என்னை காப்பாற்றினார்.! தலையைத் திருப்பியது எனது அதிர்ஷ்டம்..! துப்பாக்கி சூடு குறித்து ட்ரம்ப் பேச்சு..!!