கடந்த சில மாதங்களாக கடுமையாக விலை உயர்ந்த தங்கம் கடந்த சில நாட்களாக சிறிய அளவிலான ஏற்ற இறக்கங்களோடு விற்பனையாகி வருகிறது.
சர்வதேச அளவில் கடந்த சில மாதங்களில் தங்கம் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தங்கம் விலை கடுமையான உயர்வை சந்தித்தது. கடந்த மாதம் அதிகபட்சமாக ஆபரண தங்கம் சவரன் ரூ.98 ஆயிரத்தை தொட்டது. பின்னர் சரியத் தொடங்கிய தங்கம் விலை அசுரகதியில் விழுந்து தற்போது சவரன் ரூ.90 ஆயிரம் என்ற அளவில் சிறு ஏற்ற இறக்கங்களோடு நீடித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று விலை உயர்ந்த 22 காரட் ஆபரண தங்கம் சவரன் ரூ.90,560க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.50 விலை குறைந்து ரூ.11,270க்கு விற்பனையாகி வருகிறது.
கடும் வீழ்ச்சியை சந்தித்த வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.165க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்றும் அதே விலையில் தொடர்கிறது.
Edit by Prasanth.K