Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம்! – என்ன படம் தெரியுமா?

Advertiesment
Children Film Festival
, வியாழன், 13 அக்டோபர் 2022 (08:57 IST)
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்பட விழா திட்டம் வழி இன்று ஒரு திரைப்படம் மாணவர்களுக்கு திரையிடப்பட உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுதும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.


அதன்படி, அரசு பள்ளிகளில் உள்ள 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திரைப்படங்கள் திரையிடப்படப்படுகிறது. மாதம்தோறும் இரண்டாவது வாரம் இந்த படங்கள் திரையிடபடுகின்றன.

அந்த வகையில் இந்த வாரம் பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சில் வெளியான குறும்படமான “The Red Balloon” என்ற படம் திரையிடப்படுகிறது. 1956ல் பிரெஞ்சில் வெளியான இந்த படத்தை ஆல்பர்ட் லெமோரிஸ் இயக்கியிருந்தார். ஆஸ்கர் விருதுபெற்ற இந்த குறும்படம் இன்று மாணவர்களுக்கு திரையிடப்படுகிறது.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் வாக்கெடுப்பு: புறக்கணித்த இந்தியா!