செப். 15 ஆம் தேதி முதல்..? மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்!

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

செப். 15 ஆம் தேதி முதல்..? மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்!

Advertiesment
செப். 15 ஆம் தேதி முதல்..? மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்!
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (12:33 IST)
காலை சிற்றுண்டி திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
காலை சிற்றுண்டி திட்டம் மாநகராட்சி மண்டலம் 1 முதல் 5 வரையில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மா உணவகங்கள் மூலம் காலை சிற்றுண்டி வழங்குவதில் பல்வேறு சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால் வட சென்னை பகுதியில் சமையல் கூடம் அமைக்கப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

ஆம், சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் காலை சிற்றுண்டியில் என்னென்ன வகை உணவுகள் வழங்கப்படும் என்பது குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டது. திங்கட்கிழமை ரவா உப்புமா, செவ்வாய்க்கிழமை ரவா கிச்சடி, புதன்கிழமை ரவா பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் ரவா கேசரி, சேமியா  கேசரி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும்  ஒரு குழந்தை ஒரு நாளைக்கு வழங்கப்படும் காலை உணவிற்கான மூலப் பொருளின் அளவு 50 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள் என்றும், ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் மின்சார வாரியம்: டாக்டர் ராமதாஸ் கண்டனம்